Mini Lorry Bike Collision Near Perambalur; Youth killed!
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சி பாளையம் அருகே நேற்றிரவு மினிவேன் பைக் மீது மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானார்.
நேற்று பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் பரதன் (18), பெரம்பலூரில் இருந்து பாளையத்திறகு, பெரம்பலூர் – துறையூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அதே வழியாக பின்னால் வந்த மினிலாரி அதிவேகமாக பரதன் சென்றுக் கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் பரதனுக்கு இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு, அங்கிருந்தவர்கள் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சையின் போது. நேற்றிரவு சுமார் 10.40 மணியளவில் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரத்தை சேர்ந்த மினிவேன் ஓட்டுனர் தேவராஜ் மகன் மணிவேல் (51) என்பவரை கைது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.