Minister Mastan, who came 2 hours late to open the unfinished Sri Lankan Refugee Residence: Refugees and officials are suffering!
கடந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட படி, பெரம்பலூரில் முதல்கட்டமாக ரூ. 4.77 கோடி மதிப்பில் 72 இலங்கை அகதிகளுக்கான வீடு கட்டும் பணி பணிகள் தொடங்கப்பட்டது. இன்று அதன் திறப்பு விழா நடந்தது. ஒரு சில வீடுகளில் மட்டுமே பணிகள் நிறைவடைந்த நிலையில், பல வீடுகளில் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. அதனை இன்று, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார். அதற்காக அகதிகள் மற்றும் அதிகாரிகள் இன்று மாலை சுமார் 4 மணியில் இருந்து காத்து கிடந்தனர். மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட நிகழச்சி, மாலை 6.30 மணிக்கு தொடங்கப்பபட்டது. குழந்தைகளுடன் வந்த அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள், மற்றும் முதியவர்கள், ஊரக மற்றும் வருவாய், காவல் துறையினர் சுமார் 2 மணி நேரம் காத்து கிடந்தனர். இதனால், அரசு ஊழியர்கள் மொத்தமாக வந்து விட்டதால், இன்றைய வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன,
பொதுமக்களுக்கு அமைச்சர் வருகையில் சலிப்பு ஏற்பட்டு நிகழ்ச்சி கலை இழந்தது. அமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள், மக்களின் சேவர்கள் என உணர்ந்து உரிய காலத்தில் நிகழ்ச்சிக்கு வருகை தருதல் நலம்.
முன்னதாக, அகதிகளுக்கான வீடுகளை திறந்து வைத்து, வீட்டு சாவி மற்றும் ஒப்படைப்பு சான்றிதழ்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார். கலெக்டர் ஆபீசில் நடந்த நலத்திட்ட முகாமில் தையல் எந்திரம் மற்றும் 127 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் கற்பகம், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.