Minister Sivasankar laid the foundation stone for new projects worth Rs 2.78 crore in Kunnam constituency and started the unfinished works!
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் , பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.78 மதிப்பீட்டில் இன்று (28.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.
ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் ரூ.1.29 கோடி மதிப்பிலான 07 வளர்ச்சித் திட்டப் பணிகளும், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு இடங்களில் ரூ.77.95 லட்சம் மதிப்பிலான 17 வளர்ச்சித் திட்டப் பணிகளும், கீழப்பெரம்பலூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 23.50 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி என மொத்தம் ரூ.2.30 கோடி மதிப்பிலான 25 வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்த பணிகள் அனைத்தும் மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல அகரம் சீகூர் ஊராட்சிக்குட்பட்ட வயலூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.17.43 லட்சம் மதிப்பீட்டில் வயலூர் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடம் மற்றும் அத்தியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.31.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அத்தியூர் தொடக்கப்பள்ளி கட்டிடம் என மொத்தம் ரூ.48.43 லட்சம் மதிப்பீட்டில் 02 பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதில் வேப்பூர் யூனியன் சேர்டன் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பூர் ஒன்றிய செயலாளர் தி.மதியழகன், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.