Minister Sivasankar opens Co-operative Society buildings near Perambalur and provides welfare assistance worth Rs. 1 crore!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலுார் மற்றும் வி.களத்துார் பகுதிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
பசும்பலுாரில் நடந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், வருவாய்த் துறையின் மூலம் 26 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 12 நபர்களுக்கு கறவைமாடு வாங்குவதற்கான கடனுதவியாக ரூ.5.40 லட்சம் மதிப்பிலும், 107 விவசாயிகளுக்கு ரூ.84.97 லட்சம் மதிப்பிலான பயிர்க்கடனுதவிகளையும், 7 பயனாளிகளுக்கு ரூ.5.60லட்சம் மதிப்பிலான நகைக் கடனுதவிகளையும், பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 203 நபர்களுக்கு ரூ.5.20 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகையினையும் என மொத்தம் 370 நபர்களுக்கு ரூ 1.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். பெரம்பலுார் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசும்பலூர் திமுக பிரமுகர் ஜெயபால் மற்றும் மாவட்ட கவுன்சிலர் மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.