Minister SS Sivasankar disbursed loans of Rs.28.76 crore to 532 women self-help groups.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கான கடன் உதவிகளை வழங்குதல், மணிமேகலை விருதுகள் வழங்குதல், மாநில அளவில் வங்கியாளர்கள் விருதுகளை வழங்குதல் மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேரலை நிகழ்வில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு 532 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 6,546 மகளிர்களுக்கு ரூ.28.76 கோடி கடனுதவிகளை கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில் வழங்கினார்.
பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் கலந்து கொண்டார். 532 மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 6,546 மகளிர்களுக்கு ரூ.28.76 கோடி கடனுதவிகளை, தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் வழங்கினார்.
வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை, பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணை தலைவர் ஹரிபாஸ்கர், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: