Minister Sivashankar laid the foundation stone for the new projects worth Rs. 19.13 crore and inaugurated the completed works!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் கற்பகம் தலைமையில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் நேற்று பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பெரம்பலூர் நகரத்திற்கு உட்டபட்ட துறையூர் சாலையில் ரூ.40 லட்சம் மதிப்பில் சாலையில் நடுவே மின்விளக்குகள் பொருத்தும் பணி, எம்.எல்.ஏ அலுவலகத்தில் புதிய இ சேவை மையம், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் துறைமங்கலம் 7வது வார்டு ராஜா நகர் 2வது குறுக்குத் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை, வாலிகண்டபுரத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் போடப்பட்ட புதிய சிமெண்ட் சாலை, தேவையூரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டடம், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை, அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடம் என ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் 6 பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பெரம்பலூர் முதல் எசனை கிருஷ்ணாபுரம் வழியாக வீரகனூர் வரை செல்லும் பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் தினசரி 4 நடைகள் கூடுதல் புதிய பேருந்து சேவையினையும், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள பூம்புகார் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், காலை 7 மணிக்கு பெரம்பலூர் முதல் பிள்ளையார்பாளையம் வரை செல்லும் பேருந்து (பேருந்து எண்.11A) பூம்புகார் வரையிலும், மாலை 4.40 மணிக்கு பெரம்பலூர் முதல் அன்னமங்கலம் வரை செல்லும் பேருந்து (பேருந்து எண்.11B) பூம்புகார் வரையிலும், மாலை 5:35 மணிக்கு அன்னமங்கலம் முதல் பெரம்பலூர் வரை செல்லும் பேருந்து (பேருந்து எண்.11B) பூம்புகார் வரையிலும் சென்று வரும் வகையில் கூடுதல் பேருந்து வசதியும் பாண்டகபாடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை 9 மணிக்கு மாவிலிங்கை முதல் எசனை வழியாக பெரம்பலூர் செல்லும் பேருந்து (பேருந்து எண்.14B) பாண்டகபாடி வரை சென்று வரும் வகையில் கூடுதல் பேருந்து வசதியினையும் தொடங்கி வைத்தார்.

எறையூர் சிப்காட் பூங்காவிற்கு, ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் தினசரி 2 நடைகள் எறையூர் சிப்காட் தொழில் பூங்கா முதல் பெரம்பலூர் வரையிலான புதிய வழித்தடப் பேருந்து சேவையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் .சி.வி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் திருவாளந்துறை ஊராட்சியில் வசிஷ்ட நதியின் குறுக்கே ரூ.8.73 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணியையும், பசும்பலூர் ஊராட்சியில் பசும்பலூர் முதல் வெள்ளுவாடி வரை செல்லும் வகையில் தாலம்பூ ஓடையில் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணியையும், காரியனூர் ஊராட்சி வெள்ளுவாடி முதல் கொரக்கவாடி வரை செல்லும் வகையில் உள்ள சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே ரூ.6.56 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி என ரூ.17.76 கோடி மதிப்பில் 3 புதிய பணிகளுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

அதனைத்தொடர்ந்து வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாளந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடத்தினையும் திறந்து வைத்தனர்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என். ராஜேந்திரன், மற்றும் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம். சி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், வக்கீல் செந்தில்நாதன், அரணாரை உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார், கவுன்சிலர்கள் சிவகுமார், ரஹ்மத்துல்லா, ஷாலினி , மணிவேல், பெரம்பலூர் நகர வார்டு கிளை நிர்வாகிகள், திமுக வார்டு செயலாளர் பரிதி (எ) நீலமேகம் ஒப்பந்ததாரர்கள் தமிழரசன், சுதாகர்,

ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் என். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் வல்லபன், நல்லதம்பி, மதியழகன், ஜெகதீசன், ராஜேந்திரன், ஒன்றிய சேர்மன்கள் பிரபா செல்லப்பிள்ளை, ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, தொண்டரணி பெரியம்மா பாளையம் ரமேஷ், சிறுபான்மை மாவட்ட அணி அமைப்பாளர் அப்துல் பாரூக் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வ.சுப்பிமணியன் , நகராட்சி ஆணையர் ரமேஷ், தாசில்தார் சரவணன், பெரம்பலூர் விஏஓக்கள் அகிலன், ராஜதுரை, ராணி மோட்டார்ஸ் கொளத்தூர் டி ஆர் சிவசங்கர், மாவட்ட கவுன்சிலர் மகாதேவி ஜெயபால், மற்றும் பெரம்பலூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரினோ பாஸ்டின், உள்ளிட்ட கூட்டுறவு பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!