Minister Sivashankar orders Vepur union contractors to complete the work within the specified time!

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தனது குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், நமக்கு நாமே திட்டம், 15வது நிதிக்குழு மானியம், ஜல்ஜீவன் திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் பணித்தொய்விற்கான காரணம் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டு திட்டங்கள் செயல்படுத்தும் ஒப்பந்தகாரர்கள் மற்றும் பணித்தளத்தில் பணி மேற்கொள்ளும் நபர்களிடம் ஒப்பந்த காலம் முடிவதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரிடம் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தனித்தனியாக ஆய்வு கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, வைஸ் சேர்மன் செல்வராணி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!