Minister Thangamani inform: (Thali) Gold and financial assistance worth Rs107 crore in Namakkal district

நாமக்கல் மாவட்டத்தில் ஏழைப்பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த 7 ஆண்டுகளில் 23 ஆயிரம் பெண்களுக்கு ரூ.107 கோடி மதிப்பீட்டில் 107 கிலோ தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1029 பெண்களுக்கு தாலிக்குத்தங்கம் மற்றும் திருமண நிதி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஆசியாமரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி விழாவில் கலந்துகொண்டு தாலிக்குத்தங்கம் வழங்கியும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா ஏழைப்பெண்களின் திருமணத்திற்காக 4 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் திருமண உதவி வழங்கும் திட்டத்தை துவக்கினார். பின்னர் 2016ல் மீண்டும் முதல்வரானபோது தாலிக்கு ஒரு பவுன் (8கிராம்) தங்கம் மற்றும் 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.

தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இந்தத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 7 ஆண்டுகளில் 22,400 ஏழைப்பெண்களுக்கு இந்த திட்டத்தின்கீழ் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் 1029 பேருக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள சுமார் 2 ஆயிரம் பேருக்கு விரைவில் வழங்கப்படும். இதுவரை 23,429 பெண்களுக்கு ரூ.26 கோடி மதிப்பில் 107 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்தொகையாக ரூ.81 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.107 கோடி மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் 11 லட்சம் பெண்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ரூ.18 ஆயிரம் மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்படுகிறது. குழந்தைப் பெற்றவுடன் அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படுகிறது. பள்ளியில் சேர்த்து பின்னர் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை பல்வேறு வகையான உதவிகளையும் தமிழக அரசு செய்து தருகிறது.

பின்னர் மீண்டும் திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே கருவில் இருக்கும் குழந்தையில் இருந்து திருமணம் ஆகும்வரை அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்திடும் மாநில அரசு இந்தியாவில் தமிழகம் மட்டுமே. எ னவே அனைவரும் இந்த அரசுக்கு ஆதரவாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நாமக்கல் சப் கலெக்டர் கிராந்திகுமார்பதி, எம்.பி சுந்தரம், எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன், பொன்சரஸ்வதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு நன்றி கூறினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!