Minor girl married a young man arrested for hiding the existence of HIV, near in Perambalur!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் சத்துணவு உதவியாளராக பணிபுரியும் பெண் (ஹெச்.ஐ.வி.) பாதிக்கப்பட்ட அவருக்கு, இரு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு மைனர் பெண்ணை காதலித்துள்ளார். அப்பெண்ணுக்கு ஹெச்ஐ.வி கிடையாது, இந்த நிலையில் காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் திருமணம் செய்யப்பட்ட நிலையில், சமூக நலத் துறையினருக்கு வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், மைனர் பெண்ணை திருமணம் செய்தது தெரிய வந்தது. இது அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வாலிபரை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணம் செய்வதற்கு முன்பு இளைஞர்கள், தங்கள் இணையரை ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.