Minor girl Missing on plea to parents, the police, the police refused to file the charge

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள சின்னாறு கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் ராதா தம்பதியரின் மூத்த மகள் நிவேதா (வயது 17),இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பிஎஸ்சி டயாலிசியஸ் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (31ந்தேதி) காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற நிவேதா தற்போது வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிவேதாவின் பெற்றோர்கள் கல்லூரிக்கு சென்ற தனது மகள் காணாமல் போனதாக, மங்கலமேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை வாங்க மறுத்த போலீசார் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் தருமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் நிவேதாவின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையிலான போலீசார் நீங்கள் மங்கலமேடு சென்று புகார் தெரிவி யுங்கள் என்று கூறியுள்ளனர். மைனர் பெண்ணான தனது மகள் காணாமல் போய் இரண்டு தினங்கள் ஆகியும் போலீசார் புகாரை வாங்க மறுத்து, இந்த காவல் நிலையம் சொல்லுங்கள் அந்த காவல் நிலையம் செல்லுங்கள் என்று அழைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சின்னாறு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகன் அருள்முருகன் என்பவர் தான் தனது மகளை கடத்தி சென்றதாக போலீசாருக்கு துப்பு கொடுத்தும் ஏதோ காரணத்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக மனவேதனை அடைந்த நிவேதாவின் தந்தை விஜயகுமார் காவல் நிலையத்தில் கதறி அழுதது அனைவரையும் வேதனை அடையச் செய்தது.

இதுகுறித்து தகவலறிந்த அச்சு மற்றும் காட்சி ஊடக செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க காவல் நிலையத்தில் திரண்டனர். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தங்களது புகாரை ஏற்று வழக்கு பதிந்து, போலீசார் நிவேதாவை கண்டுபிடித்து தர வேண்டுமென அவர்களது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து காவல் நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்ததால் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!