Minority students can apply for scholarships: Perambalur Collector Santha Info
மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர் புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2020-21-ம் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும், தொழிற்கல்வி மற்றும் தொழிற்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2020-21-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் 135127 மாணவ மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மைய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். இக்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ-மாணவியர்கள் அக்.31 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவ மாணவியரின் ஆதார் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலணை செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தால் பகிரப்படமாட்டாது.

மைய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT குறியீட்டு எண்ணை மாணவ மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர;பான மைய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!