Miscreants set fire to 2 cow sheds, 13 straw bales near Perambalur!

பெரம்பலூர் அருகே நள்ளிரவில் விவசாயிகளின் வயல்களில் இருந்த, 2 மாட்டு கொட்டகை, 13 வைக்கோல் போர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், சிறுவாச்சூர் ஆகிய கிராமங்களில் 2 மாட்டு கொட்டகை, 13 வைக்கோல் போர்களுக்கு மர்ம நபர்கள் தொடர்ச்சியாக தீ வைத்து கொளுத்தி விட்டனர். குறித்து

செல்லியம்பாளையத்தை சேர்ந்த ரெங்கராஜ் மகன் இளங்கோவன் (36) சொந்தமான மாட்டுக் கொட்டகையும், புதுநடுவலூரை சேர்ந்த ஒருவரின் மாட்டுக் கொட்டகையையும், செல்லியம்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி, ராமர், அண்ணாமலை, வெங்கடாஜலம், பெரியசாமி, ராஜேந்திரன், புதுநடுவலூரை சேர்ந்த பொன்னுசாமி, நொச்சியத்தை சேர்ந்த ஜெயவேல், சுப்பிரமணி, சிறுவாச்சூரை சேர்ந்த ரவிச்சந்திரன், விளாமுத்தூரை சேர்ந்த மாமுண்டி, மற்றொரு மாமுண்டி, சிறுவாச்சூரை சேர்ந்த அண்ணாதுரை, மாடுகளுக்காக வயலில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மர்ம தீ வைத்து கொளுத்தியதில் தீ எரிந்து சாம்பலாகின.

மேற்கண்ட நபர்களின் வயல் காடு ரோட்டின் ஓரமாக உள்ளது. காட்டில் கட்டி வைத்திருந்த மாடுகளை அவிழ்த்துவிட்டு மாட்டு கொட்டகைக்கும் வைக்கோல் போர்க்கும் மர்ம நபர்கள் தீவைத்து கொளுத்தி உள்ளனர் தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர் இச்சம்பம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!