Missing person found dead in the well of the municipality; Police are investigating!

ராஜலிங்கத்தின் பழைய படம்.
பெரம்பலூர் அருகே காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இன்று காலை ஆலம்பாடி சாலையில் உள்ள பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த செல்லையா மகன் ராஜலிங்கம் (வயது 50). விவசாய தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் உடலை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறு ஆய்வு செய்து சாவுக்கான காரணம் என்ன என விசாரணை நடத்தி வருகின்றனர்.