Missing youth near Perambalur, body recovered in well!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்த சிதம்பரம் என்பவரது வயலில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக வந்த தகவலின் பெயரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை உதவியுடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சடலத்தை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் செல்லம்மாள் ஆகியோரின் மகன் ராமகிருஷ்ணன் (35) என்பதும் தெரிய வந்தது திருமணமாகாத இவர் பெரம்பலூர் கயிறு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் எதற்காக கிணற்றுக்கு வந்தார்? எப்படி இறந்தார்? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.