MLA Bhaskar initiated new projects worth Rs 24 lakh in Namakkal municipality.
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை எம்எல்ஏ பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உள்ளிட்ட ரூ.24 லட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு நாமக்கல் நகராட்சி கமிஷனர் (பொ ) கமலநாதன் தலைமை வகித்தார். முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன், முன்னாள் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நாமக்கல் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரூ. 24 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நாமக்கல் திருச்சி ரோடு ரமேஷ் தியேட்டர் அருகில், துறையூர் ரோடு போலீஸ் ஸ்டேசன் அருகில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பஸ்ஸ்டாப் அமைக்கும் பணியும்,
நாமக்கல் மதுரை வீரன் கோவில் அருகில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் பஸ்ஸ்டாப்பும் மற்றும் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் நுழைவாயில், சுற்றுச்சுவர் மற்றும் பஸ்ஸ்டாப் அமைக்கும் பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் சம்பத், ராஜா, மாதேஸ்வரா பாலன், அனுராதா பாலமுருகன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு இணைச்செயலாளர் லியாகத் அலி, நாமக்கல் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் விஜயபாபு, நல்லிபாளையம் கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் விஜயக்குமார், நகர துணை செயலாளர்கள் நரசிம்மன், சன்பாலு, சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் ராஜா, வார்டு செயலாளர்கள் ரமேஷ், கந்தசாமி, மணி ரமேஷ், வார்டு பிரதிநிதி நடேசன், ஸ்ரீதரன், இளைஞரணி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.