MLA Prabhakaran comforts maize farmers affected by army worms!
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியில் படைப்புளுக்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
படைப்புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் குறித்து மாவட்டம் முழுவதும் வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவித் தொகையை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.