MLA Prabhakaran launches five 108 ambulances in Perambalur!
மத்திய அரசு திட்டத்தின் கீழ் மாநில அரசால் பகிர்ந்தளிக்கப்பட்ட ஐந்து 108 ஆம்புலன்ஸ்களை, பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை எம்.எல்.ஏ பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி சேர்மனும், திமுக மாவட்ட செயலாளருமான குன்னம்.சி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அர்ச்சுனன், உள்ளிட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர். வழங்கப்பட்ட 5 ஆம்புலன்சுகளில் 3 ஆம்புலன்ஸ்சுகள் ஓடி கொண்டிருப்பவைகளுக்கு பதிலாக புதுப்பித்துக் கொள்ளவும், 2 புதிய ஆம்புசுலன்கள் சேவைக்கும் வழங்கப்பட்டுள்ளது.