MLA R.T.Ramachandran to set up Commercial tax & district registrar office in Perambalur

பெரம்பலூர் சர்க்கரை ஆலையை புனரமைக்கவேண்டும், வணிகவரி அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம் அமைக்கவேண்டுமென எம்எல்ஏ ஆர்டி.ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கையில் குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் பேசுகையில்,

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் 1978ல் துவங்கப்பட்டது. அன்று ஆரம்பிக்க இந்த ஆலையில் பொருத்தப்பட்ட அதே மெஷின் தான் இன்றுவரை இயங்கி கொண்டிருக்கின்றன. அவற்றில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் சர்க்கரை ஆலையை மூடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த சர்க்கரை ஆலைக்கு நிதி ஒதுக்கீடு செய்து அந்த ஆலையை புத்துணவு பெற்று இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,

அமைச்சர் பதில் :

இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் சம்பத் எறையூர் சர்க்கரை ஆலை மிஷனரி மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக நிதித்துறையில் நிதி ஒதுக்கீடு கேட்கப்பட்டுள்ளது. நிதித்துறையிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் உடனடியாக இந்த ஆலையின் மெஷினரி பராமரிப்பு பணி செய்ய வழிவகை செய்யப்படும் என்றார்.

எம்எல்ஏ ராமச்சந்திரன் :

பெரம்பலூர் மாவட்டத்தில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதே போல் வணிகவரி அலுவலகம் அமைக்க அரசு ஆவணம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அமைச்சர் பதில் :

இதற்கு பதில் அளித்து வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வணிகர்களுடைய எண்ணிக்கையும், வணிக வரி வருவாயும் மிக குறைவாகவே உள்ளதால் வணிக வரி பெரம்பலூர் மாவட்டத்தில் வணிக வரி வட்டமோ, வணிக வரி அலுவலகமோ இதுவரை அமைக்கப்படவில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரம் பதிவு பெற்ற வணிகர்கள் உள்ளது. தோராயாமாக ஆண்டுக்கு 3 லட்சத்து 35 ஆயிரம் வணிக வரி வருவாயாக ஈட்டப்படுகிறது.

1.7.2017 முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் புதியதாக வணிகர்கள் பதிவு செய்யும் பட்சத்தில் வணிகவரி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வணிகவரித்துறையின் மறு சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேவையின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக வணிக வரி அலுவலகம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எம்எல்ஏ ராமச்சந்திரன் :

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், வாலிகண்டபுரம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. எனவே பெரம்பலூரில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!