MLAs and MPs have started the Bhoomi Pooja for construction works worth Rs 10 crore for the Perambalur Government Hospital.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவ மனையில் போதிய வசதிகள் இல்லை. மருத்துவமனை மேம்பாட்டிற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா பல்வேறு நலத்திடங்களை கொண்டு வந்தார்.

அதன் பின்னர், ஆட்சியராக இருந்த தரேஸ் அஹமது மகப்பேறு உள்ளிட்ட கட்டப்பைப்பு பணிக்கும், மக்களின் சுகாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் மத்திய அரசின் நேஷ்சனல் ஹெல்த் மிசனுக்கு பின்தங்கிய மக்களுக்கு சுகாதாரம் அளிக்கும் வகையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுவதாக பரிந்துரை செய்திருந்தார்.

அதன் பேரில், மத்திய அரசும் திட்ட ஒதுக்கீட்டை அறிவித்தது. போதுமான இட வசதி இல்லாதததால் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனை அருகிலேயே இந்து சமற அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தை அரசு சார்பில் பெறப்பட்டது.

இத்திட்டத்தில், முழுமையான வெளிநோயளிகள் பிரிவு, நுண்கதிர் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, குருதி வங்கி, மகப்பேறு பிரிவு, மற்றும் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் ஆகிய பிரிவுகளுக்கு ரூ. 10 கோடி மதிப்பில் கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடை பெற்றது.

இதற்கு அஇஅதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி, எம்.எல்,ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ .இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் தொகுதி எம்.பி மா.சந்திரகாசி கலந்து கொண்டார்.

பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை பணியாளர்கள் கட்சி பிரமுகர்கள் மற்றும் கட்டடம் கட்டுமான பணி ஒப்பந்தம் செய்துள்ள சிவா கன்ஸ்ட்ரக்சன்ஸ் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!