MLAs in Perambalur have started the task of providing 10 varieties of vegetable house for Rs 60!

பெரம்பலூரில் இன்று ரூ.60 க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பை குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என்பதால் அரசு விதித்த 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்லும் போது மக்கள் அதிக அளவில் கூடினால் கரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் நகராட்சி இணைந்து 10 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பை ரூ. 60க்கு வீடு வீடாக இன்று வழங்க உள்ளனர். அதனை குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். அப்போது நகராட்சி ஆணையர் மற்றும் பணியாளர்கள் தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் பலர் சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டனர். காய்கறி தொகுப்பபில் அரை கிலோ கத்திரி, அரை கிலோ தக்காளி, கால் கிலோ வெண்டை, 100 கிராம் பச்சை மிளகாய், சுரைக்காய் 1, கால் கிலோ கேரட், கால் கிலோ சின்ன வெங்காயம், 2 முருங்கை காய் , ஒரு வாழைக்காய், கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை என 10 வகையான காய்கறிகள் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!