MNM Perambalur district secretary who married Inter-caste, arrested under Atrocities Act: auto driver’s skull fractured by helmet; MATTER REQUESTED TO GIVE WAY IN SIGNAL!
பெரம்பலூர் அருகே அருமடல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரவி மகன் பாலமுருகன் (27), ஷேர் ஓட்டுனர். அண்ணா தொழிற்சங்க உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று மாலை ஷேர் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு பயணிகளுடன் பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக காமராஜர் வளைவு சிக்னலில் ஆட்டோவை நிறுத்தி உள்ளார்.
அப்போது, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மற்றும் அவருடன் பெண்ணகோனத்தை சேர்ந்த சிம்பரம் மகன் அமர்நாத் @ மகேஷ் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். ப்ரி-லெப்ட் செல்ல ஷேர் ஆட்டோவை முன்னே நகர்த்தி வழி விடக் கூறியுள்ளார். இதில் பாலமுருகனுக்கும், முத்துக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு-முள்ளு ஆனது. இதில் முத்துக்குமார் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் பாலமுருகனை தாக்கிய உள்ளார். இதில் ஷேர் ஆட்டோ டிரைவர் பாலமுருகனுக்கு ரத்த காயம் ஏற்பட்டதில் தலையில் 4 தையல் போடப்பட்டது.
இதில் பாலமுருகன் தரப்பு கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், IPC 307 மற்றும் சாதி பெயரை சொல்லி திட்டியது என்ற பிரிவுகளின் கீழ் முத்துக்குமாரை கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது அடிதடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் காதலித்து மாற்று சமூகத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.