Mobile health care unit of the Office for Persons with Disabilities, which runs under the vehicle for the vehicle driver work

driver

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்திகளுக்கு புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ஊர்தி ஒட்டுநர் ஒரு காலிப் பணியிடத்திற்கு (முழு நேரம்— ஆண்) (தொகுப்புதிய அடிப்படையில் மாதந்தோறும் ரூ10,000 வீதம்) பணியிடத்தை நிரப்புவதற்கு நேர்காணல் நடைபெற உள்ளது. ஊர்தி ஒட்டுநர் பணியிடத்திற்கு 8ம் வகுப்ப தேர்ச்சி, நான்குசக்கர வாகன உரிமம் (LIGHT VECHILE LICENCE) பெற்றிருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு 01.07.2016ல் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) முன்னுரிமை பெற்றவர் 18 முதல் 32 வயது வரையிலும் இருக்கவேண்டும். மேற்படி கல்வித்தகுதி மற்றும் இதர தகுதிகளுடன் நடமாடும் சிகிச்சை பிரிவு ஊர்திகளுக்கு ஒரு ஊர்தி ஒட்டுநர் பணியிடத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர; அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்ப படிவங்களை நேரடியாக பெற்று 20.12.2016க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணலின்போது கல்வி நிலையங்களில் இருந்து பெறப்பட்ட கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றையும், முன்னுரிமை ஏதாவது கோரப்படின் அதற்கான சான்றிதழ்கள் (முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், கலப்புதிருமணம்) மற்றும் பிற தகுதிகள் ஏதாவது இருப்பினும் அதற்கான சான்றிதழ்களையும் நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!