Modi is bringing the Kula kalvi project through NEET Exam : Vanniyar Sangh leader J.Guru
தியாகிகள் தினத்தையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 17ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள சமூக நீதி மாநாடு விளக்க பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் அருகே உள்ள குன்னத்தில் வன்னியர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.குரு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக் குழு நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் ஜெ.குரு செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,
வரும் செப்டம்பர் 17ந்தேதி விழுப்புரத்தில் சமூக நீதி மாநாடு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் சமூக நீதியில் ஆர்வமுள்ள வட இந்திய தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் இந்த மாநாட்டில் 50 லட்சம் பேர் கலந்து கொள்வது என தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி தயார் செய்து வருகிறோம் என்றும், பெரம்பலூர் – அரியலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அனிதாவின் இறப்பு என்பது ஒரு மிகப்பெரிய கொடுமை. இங்கு ஆண்ட திராவிட கட்சி தலைவர்களான முன்னாள், இந்நாள் முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வெட்கப்பட வேண்டிய விசயம்.
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் மருத்துவ கல்வி பயில தகுதி, திறமை, மதிப்பெண் இருந்தும், நீட் தேர்வினால் மருத்துவ கனவு கலைந்து போனதால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு தலை குனிவு.
நீட் தேர்வு கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு முன்னரே அரசாங்கம். சிபிஎஸ்இ , ஐசிஎஸ்இ கல்வியை இந்த ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்து, அதற்கு மாணவ, மாணவியர்களை தயார் செய்த பிறகு நீட் தேர்வை கொண்டு வந்திருக்கலாம்.
இவர்கள் படித்தது சமச்சீர் கல்வி இதனை படித்து விட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது. இந்த தேர்வை வைத்துள்ளது எங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்றால் 1952ல் ராஜாஜி கொண்டு வந்த குல கல்வி திட்டத்தை மீண்டும் மோடி கொண்டு வருகிறார் என்று தான் தோன்றுகிறது.
தந்தை பெரியார் சமூக நீதிக்காக, வகுப்பு வாரிய விகிதச்சாரிய உரிமைக்காக பேராடிய இந்த மண்ணில் மீண்டும் குலக்கல்வி திட்டம் தலை தூக்கியுள்ளது. இதனை அரசியல் கட்சி தலைவர்களும் ஒன்றினைந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
தமிழக அரசின் செயல்பாடு என்பது ஒன்றும் கிடையாது. எதுவுமே இல்லை. இந்த தேர்தலுக்கு பிறகு அம்மையார் இறந்து போனது, சசிகலா பொதுச்செயலாளரானது, அவர் சிறைக்கு போனது. அதன் பிறகு பன்னீர்செல்வம், பழனிச்சாமி இரண்டு அணியான பிரிந்தது. அப்புறம் பழனிச்சாமி தலைமையில் முதல் அமைச்சர் பதவியை குத்தகைக்கு எடுத்தது. இப்ப இரண்டு அணியும் ஒன்று சேர்ந்தது.
ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என்று ஆதார பூர்வமாக நிருபிக்கப்பட்ட பிறகு, மோடியின் கட்டுப்பாட்டிற்குள் இந்த தமிழக அரசு இருக்கிறது. ஆக இதுவரைக்கும் மக்களுக்கு உண்டான தீர்வு, நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்பு, விவசாயிகளின் பாதிப்போ அல்லது மணல் கொள்ளை என எதற்காகவும் இந்த அரசு செயல்பாடில்லை.
ஆக எந்த தகுதியும், திறமையும் இல்லாத இந்த ஊழல் வாதிகள் குற்றவாளிகள் என்று நிருபிக்கப்பட்ட பிறகு இவர்களை கைது செய்து, பழனிச்சாமி, பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட எல்லோரையும் கைது செய்து சிறையிலடைத்து விட்டு, இந்த அரசாங்கத்தை ரத்து செய்ய வேண்டும்.
இதை மோடி உடனே செய்ய வேண்டும். அதை செய்ய தவறுவதற்கு என்ன காரணம்? பிஜேபி ஏன் செய்ய தவறுகிறது இதன் உள் நோக்கம் என்ன? என்று கேட்டார்.
முன்னதாக மாரில துணைப் பொதுச் செயலாளர் க.வைத்திலிங்கம் தலைமை வகித்தார், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் க. செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார்.
வழக்கறிஞர் தங்கதுரை, அரியலூர் மாவட்ட செயலாளர் . கண்ணன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் மருதவேல், அனுக்கூர் ராஜேந்திரன், கண்ணபிரன், தர்மராஜ். வெங்கடேஷ், பிரபு, மற்றும் பா.ம.க. மாவட்ட செய்தியாளர் இரா.வடமலை உள்ளிட்ட மாநில, மாவட்ட ஒன்றிய பொருப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.