Modi Should Get A Chance To Become Prime Minister Again, BJP Annamalai Speech In Perambalur Meeting!

என் மண் என் மக்கள் யாத்திரையாக பெரம்பலூருக்கு வந்து பாஜக மாநில தலைவர் அண்ணாலைக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம், மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் பாலக்கரையில் துவங்கிய யாத்திரை ரோவர் ஆர்ச், சங்குபேட்டை, சிவன் கோவில், கடைவீதி, தெப்பக்குளம் கனரா வங்கி, பழைய பஸ்ஸ்டாண்ட், காந்தி சிலை வழியாக வந்து ஆத்தூர் சாலை காமராஜர் வளைவு பகுதியில் நிறைவு பெற்றது. அங்கு மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், என் மண் என் மக்கள் யாத்திரை ஜூலை 28ம்தேதி ராமேஸ்வரத்தில் துவங்கி தென் தமிழகம், கொங்கு மண்டலம் பூர்த்தி செய்து 107 வது சட்டசபை தொகுதியாக பெரம்பலூருக்கு யாத்திரை வந்துள்ளேன். எல்லாதரப்பு மக்களையும் சந்தித்து கோரிக்கைகளை கேட்றிந்துள்ளேன். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை தூக்கியெறியவேண்டும் என மக்கள் குரல் கொடுத்தனர். ஏழை மக்களை பரம ஏழையாக மாற்றும் திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே 32 சதவீதம் உற்பத்தி திறனில் வளர்ச்சியில் உள்ளது. பெரம்பலூரின் உற்பத்திறன் வெறும் புள்ளி 6 சதவிதம் கூட கிடையாது. அரியலூரின் உற்பத்தி திறன் புள்ளி 3 சதவீதமாகும். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் ஒரு சதவீதம் கூட உற்பத்தி திறனை அடையவில்லை. 70 ஆண்டுகளாக 6 முறை திமுக ஆட்சி புரிந்தும் உற்பத்தி திறன் பெறவில்லை. இங்கு தொழிற்சலை கொண்டுவரப்படவில்லை விவசாயத்திற்கான தண்ணீரை கொண்டுவரவில்லை. தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டம் பெரம்பலூர், அரியலூரும் தான்.

இதே போல் கல்வி, சுகாதாரம், வருமான திறன் மூன்றும் சேர்த்து தான் மனித வளர்ச்சி குறியீடு என்கிறோம். பெரம்பலூர் புள்ளி 447 சதவீதம் தான். ஒரு சதவீதம் கூட கிடையாது. தமிழகத்தில் வளர்ச்சியில் பின்நோக்கி செல்லும் மாவட்டம் பெரம்பலூர்,அரியலூர் தான். ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையம் அமைக்க 1997ல் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுத்தனர். ஆனால் 25 ஆண்டுகள் கழித்து அனல் மின் நிலையம் அமைக்கமுடியாமல் தற்போது திருப்பி தந்துள்ளனர். இதனால் 25 ஆண்டுகளாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குன்னம் தொகுதியில் 2007 ம் ஆண்டில் சிறப்பு பொருளதார மண்டலத்திற்காக 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னுமும் சிறப்பு பொருளதார மண்டலம் அமைக்கப்படவில்லை.

தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட ஆட்சியில் எந்த வித வளர்ச்சியும் இல்லை. தொழிற்சாலை கொண்டுவரவில்லை, வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை, பாசன வசதியை மேம்படுத்தடவில்லை, விவசாயத்தை செழிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை, ஆகையால் தமிழகத்திற்கு புதிய அரசியல் தேவைப்படுகிறது. நம்மை ஒதுக்கிய அரசியல்வாதிகளை நாம் ஒதுக்கிவைக்கவேண்டும்,

ஊழல் பட்டியல் வெளியிட்டு வருகிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்த ரெய்டு மூலம் ஆயிரத்து 250 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் சிவசங்கர் மீதும் ஊழல் பட்டியல் கவர்னரிடம் அளித்துள்ளோம். ஓராண்டில் போக்குவரத்து துறையில் ரெபிலக்ட் ஸ்டிக்கர் ஒட்டுதலுக்கு ஆயிரத்து 300 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. போக்குவரத்து துறையில் உபகரணங்கள் வாங்கியதில் 700 கோடி ஊழல் என 2 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார். திமுக அமைச்சரவையில் உள்ள 35 பேரில் 11 பேர் மீது ஏற்கனவே ஊழல் வழக்கு உள்ளது. 5 பேர் மீது தற்போது ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் இந்த அளவிற்கு ஊழல் செய்த அமைச்சர்கள் தமிழகத்தில் உள்ளனர். 30 மாதங்களில் ஊழலை சாதனையாக செய்துள்ளது திமுக அரசு

திருவண்ணாமலையில் சிப்காட்டிற்காக அரசு 3 ஆயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து 125 நாட்களாக அவர்களது விவசாய நிலத்தில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகள் மீது தமிழக அரசு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த ஒரே அரசு திமுக அரசு தான்.

அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்த பட்டியலில் உலக அளவில் முன்னாள் அமைச்சர் ராஜா பெயர் இரண்டாது இடத்தில் உள்ளது. கோவையில் அவருக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை அமலாக்கதுறை முடக்கியுள்ளது.

9 ஆண்டில் மத்திய அரசு தமிழகத்திற்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொடுத்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது. ஆனால் திமுக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறது. தமிழகத்தில் திமுக தேர்தலில் அளித்த 511 தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என திமுக கூறுகிறது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வில்லை. ஊழல் செய்வதில் தான் குறியாக உள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் 11வது பெரிய நாடாக இருந்தது. தற்போது உட்கட்டமைப்பு, சாலை மேம்பாடு என அனைத்திலும் முன்னேற்றம் அடைந்து உலக அளவில் பொருளதாரத்தில் 5 இடத்திற்கு உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கல்குவாரி டெண்டரில் பாஜக பிரமுகர்களை தாக்கிய திமுகவினர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் அமைச்சர் சிவசங்கரின் துண்டுதலால் இந்த வன்முறை நடந்துள்ளது. ஊழல் செய்த அமைச்சர் சிவசங்கருக்கு நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. சிலமாதங்களில் நடக்கும். ஆட்சியும், அதிகாரமும் கையில் உள்ளது எனவும், எண்ணவேண்டுமானாலம் செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் நினைக்கிறார். என்ன நடக்க போகிறது என சில மாதங்களில் தெரியும். நாகரீகமான அரசியல் தமிழக மண்ணிற்கு வரவேண்டும், வளர்ச்சி சார்ந்த அரசியல் வரவேண்டும், ஏழை மக்கள் முன்னேற்றத்திற்கான அரசியல் வரவேண்டும். அப்படி பட்ட ஆட்சி வரவேண்டும் என்றால் மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றிப்பெற்ற நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். அதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

யாத்திரையில் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகாணந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராம்குமார், மாவட்ட தொழிற்பிரிவு துணை தலைவர் கலைச்செல்வன், தமிழ் இலக்கிய மற்றும் தமிழர் நலன் பிரிவு மாவட்ட தலைவர் பிரவிஷ்குமார், ஈச்சங்காடு மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் செல்வராஜ் வரவேற்றார். நகர தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!