Modi’s birthday celebration on behalf of the BJP: Special pujas in Namakkal Sri Anjaneya temple
நாமக்கல் பிஜேபி இளைஞரணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 68வது பிறந்தநாள் விழா நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஸ்குமார் தலைமை வகித்தார்.
பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவில் நகர இளைஞரணி தலைவர் ராஜா, எருமப்பட்டி ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரபு, நிர்வாகிகள் நரேஷ், பிரேம் கவியரசன்,கோபி, பிரனவ்குமார்,வக்கீல்கள் குப்புசாமி, மனோகரன் மகளிர் அணி வசந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.