More than 300 bulls, Youths participating in Sillakudi Jallikattu!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி கிராமத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டன.
கால்நடை பராமரிப்பு, வருவாய், சுகாதாரம் மற்றும் காவல் துறையினரின் கண்கானிப்பின் கீழ் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தது ஜல்லிக்கட்டு போட்டியினை, இந்திய விலங்குகள் நலவாரிய பொறுப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல், போலீஸ் எஸ்.பி., மணி, ஆர்.டி.ஓ நிறைமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாடு பிடி வீரர்களும் முறையாக பெயர் பதிவு செய்யப்பட்டு, மூன்று கட்டங்களாக மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க களமிரக்கப்பட்டனர். மேலும் மாடு பிடி வீரர்களின் உடல்தகுதி குறித்து மருத்துவக்குழுவினர் முழு ஆய்வு செய்த பின்னரே, போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கால்நடை பராமரிப்புத்துறையினர் மூலமாக போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கு போதைப்பொருள் ஏதும் தரப்பட்டுள்ளனவா, போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா என்று சான்றளிக்கப்பட பின்னரே மாடுகள் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டன. 300 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்ற போட்டியில், 300 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.
மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ குழுவினர் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் இருந்தனர்.
250க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தீயணைப்பு, மின்சாரம், பொதுப் பணித்துறையினர்களும் உடன் பணிபுரிந்தனர்.