பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப் பாடி கிராமம் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 35) விவசாய கூலி இவருக்கு சொந்தமான கூரை வீடு இருந்தது
இந்நிலையில் இன்று மாலை, வீட்டில் யாரும் இல்லாத போது கூரை வீடு தீ பிடித்து எரிந்து சாம்பலானது வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்களும் எரிந்தது இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ 50 ஆயிரம் ஆகும்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் தீ அணைப்பு நிலைய அலுவலர் மற்றும் படை வீரர்கள் விரைந்து சென்று தீ அணைத்து கட்டுபாட்டிக்கு கொண்டு வந்தனர். வீடு தீ பற்றி எரிந்ததற்கு காரணம் மின் கசிவாக இருக்கலாம? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல் ஓலைப் பாடி கிராமம் அருகே கோவிந்தராஜபட்டினம் கிராமத்தில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் உள்ள எல்.இ.டி டிவி, லேப்டாப், செல் போன், மற்றும் வீட்டு உபயோக பொருட்களுகளும் எரிந்து நாசமானது இவற்றின் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும்.