பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்நதவர் ராஜேந்திரன், இவரது மனைவி பாக்கயிம் (வயது 47), இவரது மகள் கிருத்திகா (25) எம்.டெக் பட்டதாரி. பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது போதையில் அரசு ஆம்புலன்சின் டிரைவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டே வந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவரின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. அதில் எதிரே வந்தவரின் கால் முறிந்தது.
போலீசார் மீட்பு பணியில் ஈடுப்பட்ட போதுதான் ஆம்புலன்ஸ் டிரைவர் கடும் போதையில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் பெரம்பலூர் போலீசாரே ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
பெரம்பலூர் அருகே தாய் மகள் தற்கொலைக்கான வழக்கையும், போதையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விபத்து ஏற்படுத்தி காலை முறித்தது தொடர்பாக வெவ்வேறு வழக்குகள் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.