Mother commits suicide by poisoning her 2 daughters near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி களத்தூர் கிராமம், வண்ணாரம்பூண்டி பகுதியில் உள்ள மில்லத் நகரைச் சேர்ந்தவர்கள் ஷாகுல் ஹமீது (வயது 39),- ரஹமதுநிஷா(35), தம்பதியினர்.
இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று, ஷபா(8), ஷனா(6), என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இதனிடையே சாகுல் ஹமீது கடந்த சில வருடங்களாக சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சாகுல் ஹமீதீன் பெற்றோர்களான சபியுல்லா-முஸ்தூர்பேகம் வீட்டின் தரை தளத்திலும், தனது 2 பெண் பிள்ளைகளுடன் ரஹமதுநிஷா வீட்டின் முதல் தளத்திலும், வசித்து வந்தனர்.
இந்நிலையில் சாகுல் ஹமீது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த வி.களத்தூர் போலீசார் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று, துர்நாற்றம் வீசிய ஷாகுல்ஹமீது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் ரஹமதுநிஷா விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, அவர் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சாகுல் ஹமீது மற்றும் ரஹமதுநிஷாவின் பெற்றோர்கள் உள்ளிட்ட அப்பகுதி பொது மக்களிடம் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண் ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது பெற்றோர் உள்ளிட்ட அப்பகுதி பொது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.