Mother throws away baby girl with umbilical cord near Perambalur; Police investigation!
பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில், பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று கொடூர மனம் படைத்த தாய், பெற்ற குழந்தை குழந்தையை பெரம்பலூர் – துறையூர் சாலையில் உள்ள இரட்டைப்பாலம் என்ற பகுதியில் தொப்புள் கொடியுடன் சாக்குப் பையில் கொண்டு வந்து வீசி சென்றுள்ளார்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சிசுவின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குழந்தை கள்ளக்காதலில் பிறந்ததா? அல்லது 2 வது. அல்லது 3வதாக பெண் குழந்தை பிறந்ததா, அல்லது மைனர் எவரேனும் குழந்தை பெற்று வீசி சென்றனறா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும், பெரம்பலூர், அம்மாபாளையம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று சென்றவர்களின் விவரங்களையும் வைத்து போலீவார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றக் குழந்தையை ஈவு இரக்கமின்றி தொப்புக் கொடியுடன் வீசி சென்ற தாயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.