Motorcycles face face to face near Namakkal; Betel Merchant Killed
நாமக்கல் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வெற்றிலை வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல் மாவட்டம், குன்னிபாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (70), வெற்றிலை வியாபாரி. அதேபகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (45) என்பவருடன் சம்பவத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூர் நோக்கிச் சென்றார். மோட்டார் சைக்கிளை அன்பழகன் ஓட்டினார். அதேபோல் எல்லைக்காட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பவர் மோட்டார் சைக்கிளில் பரமத்திவேலூரில் இருந்து மோகனூர் ரோட்டில் வந்துகொண்டிருந்தார். கீழ்பாலப்பட்டி அருகே வந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் ராஜேந்திரன், அன்பழகன் இருவரும் படுகாயம் அடைது நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மோகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.