MP Parivendar visits affected Consolation in person to owner: Cotton mill fire near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் ராமராஜ் என்பவருக்கு சொந்தமான தனியார் பஞ்சாலை உள்ளது. நேற்று அந்த ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமானது.
இதை அறிந்த பெரம்பலூர் தொகுதி எம்.பி பாரிவேந்தர் பார்வையிட்டு, சேத விபரங்களை கேட்டறிந்த அவர் ஆலை அதிபருக்கு மனதை தளரவிடாமல் தன்னம்பிக்கையுடன் தொழிலை மீட்குமாறு ஆறுதல் கூறினார். அங்கு வந்த காப்பீட்டு நிறுவனத்தாரிடம் உரிய இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்குமாறு எடுத்துரைத்தார். அப்போது, பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரகுபதி உள்பட ஐ.ஜே.கே., கட்சி பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.