Municipal commissioner raids Perambalur bus stand: 10 fined Rs 200 each for not wearing face Mask

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நகர் மற்றும் புறநகர் பகுதிகள், பேருந்து நிலையம், கோவில்கள், மார்க்கெட், கடைவீதி, ஹோட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், பொது மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படுவதோடு, அறிவுரைகளும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், உள்ள கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏறி ஆய்வு மேற்கொண்ட ஆணையர் பேருந்துக்கள் அமர்ந்திருந்த பயணிகளை முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத நகரமா கவும், மாவட்டமாக பெரம்பலூரை மாற்றிட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் அனைத்து பேருந்துகளிலும் அவசியம் கிருமி நாசினியை வைத்திருப்ப தோடு அவற்றை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கட்டாயம் வழங்க வேண்டுமென்றும் அறிவுறுத்திய நகராட்சி ஆணையர்,
முகக்கவசம் அணியாத நடத்துனர், ஒட்டுநர் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட 10 பேருக்கு தலா 200 வீதம், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!