Municipality of Perambalur refusing to buy trash, sanitary napkin used by children! Stranded people !!
பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் தற்போது குப்பைகளை, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வாங்குவதோடு, குழந்தைகள் பயன்படுத்தும் பேம்பஸ் மற்றும் சானிட்டரி நாப்கின்களை பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வாங்க மறுப்பதால், அவற்றை எப்படி அழிப்பது, அதை எங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மறுசுழற்சி செய்யத் தெரியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வீட்டுவரியுடன் குப்பை வரியும் வாங்கும் நிர்வாகம் இதனையும் வாங்கி மறுசுழற்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பலர் இது போன்ற குப்பைகளை வாங்கததால், வீதிகளில் வீசி செல்கின்றனர். அதனை நாய்கள், எலிகள் போன்றவை கடித்து குதறி தெருவெல்லாம் நாறடிக்கின்றன. எனவே, நகராட்சி நிர்வாகம் குழந்தைகள் உபயோகப்படுத்திய பேம்பஸ், சானிட்டரி நாப்கின் குப்பைகளை வாங்கி மறுசுழற்சி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.