Murder threatened of Perambalur Marxist Party executive, Report to the SP!
மார்க்சிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை தற்போது தமிழக மக்கள் ஒற்றுமை மேடை பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். 1.2.2020 அன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் நேற்றிரவு 11 மணியளவில் தனக்கு தொலைபேசியில் பெயர் கூற விரும்பாத மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு தேனிமாவட்டத்தில் இருந்து பேசுவதாகவும், கொச்சை வார்த்தைளால் வெறித்தனமாக பேசியதால் நான் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டேன் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் சிஎஎ தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பிஆh; மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்கள் அனைத்து மக்களையும் பாதிக்கின்ற காரணத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து மதத்தினருடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம்.
போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத இந்து மதவெறி பிடித்த மர்மநபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மாவட்ட காவல் கண்கானிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனு கொடுத்தனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , பகுஜன் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி , தமுமுக தி.க, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அகஸ்டின், பி.ரமேஷ் மற்றும் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.