Murugan appeared in a special outfit for the festivities in the Namakkal Murugan temples.

வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு நாமக்கல் முருகன் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி விழா இன்று கொண்டாப்பட்டது. அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் – மோகனுார் சாலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டி விழா வெகு விமற்சையாக நடைபெற்றது. அதை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.

தொடர்ந்து மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சல் உள்ளிட்ட நறுமன பொருட்கள் கொண்டு அபிேஷகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து வெள்ளி கவசம் சாத்தப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம் மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு ராஜா அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதே போல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷகங்கள் செய்யப்பட்டு வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நாமக்கல்-–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருங்கல்பாளையம், கருமலை தண்டாயுதபாணி ஆலையத்தில், வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு, இன்று காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து மகா தீபாரதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளாமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!