Murugan Temple Car premiere near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபாலதண்டயுதபாணி சமேத வள்ளி தெய்வானை திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம் மற்றும் கந்தசஷ்டி விழாக்கள் நடைபெறும். இந்த கோயிலுக்கு நீண்ட நாட்களாக திருத்தேர் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஊர்பொதுமக்கள் கூடி சுமார் 8 லட்சம் ருபாய் செலவில் புதியதாக திருத்தேர் செய்தனர். அதன் வெள்ளோட்ட விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி திருத்தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டது. பின்னர், வாழை மரம், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட முருகன் சிலை வைக்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் அனைவரும் கூடி அரோகரா கோஷத்துடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இதில் கீழப்புலியூர், முருக்கன்குடி, வாலிகண்டபுரம் சுற்றுக் கிராமங்களை சேர்ந்த பெருந்திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விபூதி, குங்குமம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.