Musiri – kolakkudi mosque, the Muslims, the candidate pledged to support parivendhar
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கொளக்குடியில், மதசார்பற்ற கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தருக்கு, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வாக்களர்களிடம் பேசியதாவது:
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர் பழகுவதற்கு இனிமையானவர் அவர் கல்வி மற்றும் மருத்துவ சேவை மூலம் பொதுமக்களுக்கு தொண்டுகள் செய்து வருகிறார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது நீங்கள் செய்த அதிர்ஷ்டம் அவரை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
கடந்த தேர்தலிலும் மக்கள் பாரிவேந்தருக்கு ஆதரவளித்தனர் இருந்தாலும் சரியான கூட்டணிகள் சேராததால் தோல்வி அடைந்தோம் தற்பொழுது நல்ல கூட்டணிகள் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு வாக்குகள் அளித்து வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பள்ளிவாசல் தலைவர் அப்துல்பஷீர், சால்வை அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தார். கொளக்குடி கிராமத்தில் உள்ள மஸ்ஜிதுல்ஈமான் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் ரவிபச்சமுத்து வாக்குகள் சேகரித்தார்.
தங்களது ஊரின் முக்கிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது என்றும் மணமேடு கிராமத்தில் இருந்து இக்கிராமத்திற்கு வருகை தரும் கூட்டுக் குடிநீர் திட்டம் குழாய்கள் பழுதடைந்ததால் உரிய முறையில் குடிநீர் கிடைக்கவில்லை எனவே இதை சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
பாரிவேந்தர் வெற்றி பெற்ற பிறகு உங்களின் தேவைகள் அனைத்தையும் கேட்டு ஒன்றன் பின் ஒன்றாக செய்து கொடுப்பார்.
பாரிவேந்தர் கல்வியாளர் மக்களின் பணிக்காகவே தற்பொழுது போட்டியிடுகின்றார் எனவே அவரை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
கொளக்குடி கிராமத்து இஸ்லாமியர்கள் நூறு சதவீத தங்களது ஆதரவு பாரிவேந்தருக்கு என்று உறுதி அளித்தனர்.
பாரிவேந்தர் மருமகன் டாக்டர் சிவக்குமார் வாக்களர்களிடம் பேசியதாவது:
உங்கள் பகுதிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க உங்கள் தொகுதியில் நிற்கிறார். நாடளுமன்ற உறுப்பினர் ஆகவதற்கு முன்பகவே சொந்த செலவில் உங்களுக்கு சேவை செய்து வருகிறார். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.
நீங்கள் அனைவரும் அவரை வெற்றி பெறச் செய்தால் அரசிடமிருந்து தேவையான நிதிகளை பெற்று உங்களது தொகுதி எண் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வார் என பேசினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!