Mysterious animal attack near Perambalur; 2 calves killed, including 1 goat! Forest department waiting with snare !!
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சண்முகம், இவருக்கு சொந்தமான கொட்டகைக்கு இன்று காலை சென்று பார்த்த போது, நேற்றிரவு கட்டப்பட்டடிருந்த 1 ஆடு, 2 கன்றுக்குட்டிகள் மர்மமான முறையில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தது. மற்றொரு கன்றுக்குட்டி பலத்த காயமடைந்து கிடந்தது.
இது குறித்து பெரம்பலூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், வனத்துறையினரும், கால்நடைத்துறையினரும், மர்ம விலங்கின் அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த கன்றுக்குட்டிக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
மேலும், இது தொடர்பாக போலீசார், வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதோடு, வனத்துறையினர் மர்ம விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என்ற கோணத்தில், அதை பிடிக்க, வலை மற்றும் கூண்டோடு தயாராகி வருகின்றனர். இதனால் , அக்கிராம மக்கள் கடந்து சில நாட்களுக்கு முன்பு துறையூர் பகுதியில் தாக்கிய சிறுத்தையாக இருக்குமோ என்று அச்சமடைந்துள்ளனர்.