Mysterious dead nurse near Perambalur! Police are investigating !!
விருதுநகர் மாவட்டம், கன்னிச்சேரிபுதூர் கிராமத்தை சேர்ந்த மணி மகள் சரண்யா(33), என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகன் கருப்புசாமி(33), என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணமாகி யோகேஷ்(4) என்ற ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ந்தேதி பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்டாப் நர்சாக பணியில் சேர்ந்து பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் லாடபுரம் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்பில் நேற்று இரவு வழக்கம் போல் தனது கனவர் கருப்புசாமி மகன், யோகேஷ் ஆகியோருடன் தூங்கியவர் இன்று காலை வெகு நேரமாகியும் எழுந்து வராததால் சந்தேகமடைந்த அவரது கனவன் அருகில் சென்று பார்த்த போது சரண்யா இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கனவர் கணேசன் கூச்சலி ட்டவாரே ஓடிச் சென்று சம்பவம் குறித்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்து அவர்கள் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணியில் சேர்ந்து ஒரு மாதமே ஆன நிலையில் அரசு ஆரம்ப சுகாதார செவிலியர் ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் அவரது 4 வயது குழந்தை, கனவர் உள்ளிட்ட குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.