Mysterious death near Perambalur: Parents, relatives protest against refusing to buy the body!

பெரம்பலூர் அருகே மர்மமான முறையில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு சம்பவத்தில், சடலத்தை வாங்க மறுத்து பெற்றோர் உள்ளிட்ட உறவி னர்கள் போராட்டம் நடத்தினர், இது குறித்து போலீசார், ஆர்டிஓ ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொளப்பாடி கிராமத்தை பொறியாளரான பாலசுப்ரமணியணுக்கும், அதே ஊரைச் சேர்ந்த பிஎஸ்சி நர்சிங் படித்த விஜி(எ) விஜயலட்சுமி(22), என்பவருக்கும் இரு வீட்டார்கள் முன்னிலையில் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து வெளிநாடு சென்ற பாலசுப்ரமணியன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஜனவரி மாதம் விடுமுறையில் ஊர் திரும்பியதால் கணவர் வீட்டில் வசித்து வந்த விஜயலட்சுமியை அவரது பெற்றோர் ஆடிமாதம் என்பதால் இந்து மத வழக்கப்படி தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இரவு நேரத்தில் மட்டும் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்த விஜயலட்சுமி பகல் நேரத்தில் கணவர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி, ஆவணி மாதம் பிறந்ததால் முறைப்படி கணவர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட விஜயலட்சுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கி கிடந்துள்ளார்.

இதனையறிந்த அவரது பெற்றோர் உள்ளிட்ட கணவர் வீட்டார் விஜயலட்சுமியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சை க்காக அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனையடுத்து விஜயலட்சுமியின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இன்று உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது., விஜயலட்சுமியின் சடலத்தை வாங்க மறுத்த அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் விஜயலட்சுமியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு, கணவர் வீட்டார் தான் காரணம் என்றும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குன்னம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமியின் பெற்றோர் உள்ளிட்ட உறவினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர்.

இதுகுறித்து, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் குன்னம் போலீசார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விஜயலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!