Mysterious death of 52-year-old man near Perambalur: Marxists protest demanding probe!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் நமையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கன் மகன் ராஜேந்திரன் (வயது 52). இவர் கடந்த 17.4.2021 சனிக் கிழமையன்று வீட்டைவிட்டு சென்றவர் 18.4.2021 ஞாயிறு மதியம் வரை வீடு திரும்பவில்லை. பதற்றமடைந்த அவரது மனைவி ஞாயிறு மாலை அருகிலுள்ள மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். ஆனால், போலீசார் புகாரை வாங்க மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் 20.4.2021 செவ்வாய் மதியம் 1 மணியளவில் நமை ஏரியில் ஒருவர் சடலமாக மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தகவலளித்ததின் பேரில் இறந்தவர் ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், மங்களமேடு போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மாதர் சங்க துணைசெயலாளர் மற்றும் இறந்தவரது மகளுமாகிய ராதிகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு அளித்த தகவலின் பேரில் 21.4.201 புதனன்று அரசு மருத்துமனை முன் திரண்ட கட்சி நிர்வாகிகள் முன்னதாக அளித்த புகாரை வாங்க மறுத்த மங்களமேடு போலீசாரை கண்டித்தும் இறந்தவருக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால் நீரில்முழ்கி இறக்க வாய்ப்பில்லை எனவே உயர் மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனவும், மாவட்ட செயற்குழு உறுப்பினரும் விதொச மாவட்ட செயலாளருமாகிய பி.ரமேஷ் தலைமையில் கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு எ.கலையரசி, எஸ்.பி.டி.ராஜாங்கம் தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மாவட்ட செயலாளர் எம்.கருணாநிதி, சிபிஎம் மாவட்டக் குழு சி.சண்முகம், ரெங்கநாதன், பி.ரெங்கராஜ் குன்னம் தாலுகா செயலாளர் ஆறுமுகம், விதொச மாவட்ட துணைசெயலாளர் கோகுலகிருஷ்ணன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சின்னபொண்ணு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். டிஎஸ்பி தலைமையில் உரிய நீதிவிசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மங்களமேடு காவல் நிலையத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவது என அறிவிக்கபட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!