Mysterious fever kills woman! Municipality condemning the protesting youth and lay down the road in Perambalur !!

பெரம்பலூர் துறைமங்கலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகே பெரம்பலூர் – திருச்சி செல்லும் சாலையில் வாலிபர் பாலு என்பவர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அருகிலிருந்து டி.எஸ்.பி மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தியதில், அவரது தெருவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை வழிந்தோடுவதாகவும், அதை அப்புறப்படுத்த நகராட்சி பணியாளர்களிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், வீசும் துர்நாற்றத்தை சகிக்க முடியவில்லை என்பதோடு குடியிருக்கவும் அருவருப்பாக உள்ளது. அது மட்டுமில்லாமல், அதே 10 வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது சுமார் 50) .இவர் நேற்று முன்தினம் இவருக்கு மர்ம காய்ச்சல் வந்துள்ளது. இதனையொட்டி சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டெங்கு அறிகுறி இருந்ததால் மேல்சிகிச்சைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பாப்பாத்தி உயிரிழந்தார். நன்றாக இருந்த அவரும் இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது.

அங்கிருந்த போலீசார் பாலுவிடம் சமசர பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பாலு சாலை மறியலை கைவிட்டார். பாலுவின் கோரிக்கை ஏற்ற போலீசார் பாலுவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து நகராட்சி பணியாளர்கள் இன்று மாலைக்குள் சரி செய்வதாக உறுதி அளித்தனர். இந்த சாலை மறியல் சம்பவத்தால் சுமார் 15 நிமிடம் பெரம்பலூர் – திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!