Mysterious men robbed women of 16 pounds near Perambalur; Police intensive investigation!
பெரம்பலூர் அருகே உள்ளது குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் இன்று ஸ்ரீசெல்லியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து விழாவை வந்து உறவினர்கள், பக்தர்கள் குவிந்து இருந்தனர்.
இந்நிலையில், உபதாரர்கள் சார்பில் உணவு வழங்கி கொண்டிருந்த போது, 4 பெண்களிடமிருந்து மர்ம நபர்கள் 16 பவுன் தங்க செயின்களை பறித்து சென்றனர்.
தங்க சங்கிலியை பறிகொடுத்த, பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி மனைவி சத்தியபாமா (55), 5 பவுன் தாலிக் கொடியையும், சோலைமுத்து மனைவி அலமேலு (75), 3 பவுன் தங்க சங்கலியையும், வெங்கலம் கிராமத்தை சேர்ந்த , பாலசுப்பிரமணி மனைவி நீலாவதி (55) 3 பவன் தங்க சங்கலியையும், கடலூர் மாவட்டம், எழுத்தூரைச் சேர்ந்த முத்துசாமி மனைவி நீலாம்பாள் (65) 5 பவுன் தாலிக் கொடியையும், மர்ம நபர்கள் அவர்களிடம் பறித்து சென்றதாக கொடுத்த புகாரிகன் வழக்குப் புதிவு செய்த பெரம்பலூர் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களிடம், 16 பவுன் தங்கநகைகள் பறித்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.