Mysterious persons took away the barrels yesterday: Water, buttermilk will be provided to the public from today till the end of summer: Durairaj, member of the MDMK Political Leadership Advisory Committee Information!
பெரம்பலூர் விளாமுத்தூர் சாலை சந்திப்பு அருகே மதிமுக சார்பில் கடந்த மே. 6ம் பொதுமக்கள் கோடையின் வெப்பத்தை தணிக்க நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது,
அதில், நேற்று நீர், மோர் வழங்கவில்லை காலைமலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு மதிமுக அரசியல் தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் துரைராஜ் தெரிவித்த தகவல்:
நேற்று திருமணத்திற்கு சென்றுவிட்டேன். நீர், மோர் வழங்கும் பாரல்களை மர்மநபர்கள் யாரோ எடுத்து சென்றுவிட்டனர். புதிய பாரல்கள் வாங்கப்பட்டு பொதுமக்கள் தாகம் தணிக்க இன்று காலை முதலே நீர், மோர் வினியோகம் தண்ணீர் பந்தலில் செய்யப்படுகிறது. இது கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும் வரை தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.