In Perambalur district, 24082 people were vaccinated against corona; Perambalur Collector!
தமிழக முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க பெரம்பலூர்மாவட்டம் முழுவதும் இன்று 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்), வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,200 நபர்கள் பொது மக்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொண்டனர்.
பெரம்பலூர் ஒன்றியத்தில் 7440 பேர்களுக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 4283 பேர்களுக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 5259 பேர்களுக்கும், வேப்பூர் ஒன்றியத்தில் 7100 பேர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் 24082 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமுடன் சிறப்பு முகாம்களுக்கு வந்த பொதுமக்களுக்கு அவர்களது பெயர், அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து இன்று அல்லது நாளை அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், கலெக்டர் வெங்கடபிரியா என தெரிவித்துள்ளார்.