Nadukal for the Tamils who died during the 2nd World War: Transport Minister Sivashankar will participate in Thailand on behalf of the Chief Minister!

இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி “நடுகல்” நிறுவிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.10 இலட்சம் நிதியுதவி வழங்கியதற்காக நன்றி தெரிவித்து, தாய்லாந்து காஞ்சனபுரியில் வரும் மே1 அன்று நடைபெறவிருக்கும் “நடுகல்” திறப்பு விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு, தமிழ்நாடு முதலமைச்சரை கடந்த 11.4.2024 அன்று தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினர் சந்தித்து, சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தனர். தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொள்ளவுள்ளதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (27.4.2024) அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!