Namakkal and veterinary medical college students will be participating tomorrow’s white Coat
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் மோகன் வெளியிட்டுள்ள தகவல்:
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தல் நிகழ்ச்சி நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் இன்று ( 18ம் தேதி ) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
டாக்டர் இசக்கியல் நெப்போலியன் வரவேற்கிறார். மாணவர்கள் சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து சிறப்பு செய்யும் வகையில் வெள்ளை அங்கி அணிவிக்கப்படுகிறது. நிகழ்ச்சியை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மோகன் தலைமை வகித்து துவக்கிவைத்து பேசுகிறார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆஸ்பத்திரி மோலாண்மைக் குழு உறுப்பினர் விஜயன், தமிழ்நாடு கால்நடை பராமாரிப்புத் துறையின் நாமக்கல் மண்டல இணை இயக்குனர் டாக்டர் பொன்னுவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகின்றனர்.
மேலும் டாக்டர்கள் செல்வராஜூ, பழனிவேல், விஜயக்குமார், கதிர்வேல், செல்வராஜூ உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகின்றனர். 4ம் ஆண்டு மாணவன் விக்னேஷ்வர் நன்றி கூறுகிறார்.