Namakkal Andavar Nagar Sarva Sakthi Mariamman Temple festival started.
நாமக்கல் ஆண்டவர் நகர் சர்வ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.
நாமக்கல் திருச்சி ரோடு ஆண்டவர் நகரில் அமைந்துள்ள சர்வ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. விழாவை முன்னிட்டு கடந்த 13ம் தேதி கம்பம் வெட்டப்படுதல், கரகம் பாலித்து சக்தி அழைத்தல், காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வடிசோறு பூஜை நடைபெற்றது.
நாளை 21ம் தேதி திங்கள் கிழமை காலை 6 மணிக்கு பால்குடம் எடுத்தல், காலை 9 மணிக்கு சர்வ சக்தி மாரியம்மன் திருத்தேரில் வைத்து கோவிலில் வழிபடுதல், மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
22ம் தேதி செவ்வாய்கிழமை காலை 7 மணிக்கு பொங்கல் பூஜை, மாலை 6 மணிக்கு மகளிர் இன்னிசை பட்டிமன்றம் நடைபெறுகிறது.
23ம் தேதி புதன்கிழமை மாலை 2 மணிக்கு சர்வ சக்தி மாரியம்மன் திருத்தேரில் வைத்து வழிபடுதல், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், அம்மன் குடிபுகுதல், கம்பம் எடுத்து ஆற்றில் விடுதல் நடைபெறுகிறது.
24ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மறு அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.