Namakkal building workers demonstrated before the Labor Welfare Board
நாமக்கல் தொழிலாளர் நலவாரியம் முன்பு கட்டிடத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாமக்கல் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நலவாரிய அலுவலகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் நந்தகுமார் தலைமை வகித்தார்.
இதில் ஓய்வூதியம் வழங்கக் கோரி மனு கொடுத்து 6 ஆண்டுகளாக காத்திருக்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். இறந்து போன தொழிலாளியின் குடும்பத்துக்கு விபத்து மரணநிதி, இயற்கை மரணநிதி விரைந்து வழங்க வேண்டும்.
மாவட்ட நல அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் நடேசன், துணைச்செயலாளர் குமார், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன், துணைத் தலைவர் தம்பிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.